இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நளினி விவகாரத்தில் தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானதே : த ஹிந்து

JKR  சனி, 3 ஏப்ரல், 2010

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் தொடர்பில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வழக்கு குறித்த, தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானது என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி தமிழ் நாடு ஸ்ரீ பெரம்பத்தூரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபராக கருதப்பட்ட நளினி முருகனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியின் கோரிக்கை அடிப்படையில் அவருக்கான மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் பல வருடங்களாக சிறையில் இருந்த நளினி, தம்மை விடுவிக்குமாறு கோரி பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
எனினும் இது தொடர்பில் தமிழக அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என சென்னை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், நளினி முருகனை விடுவிக்க முடியாது என தமிழக அரசாங்கம் அறிக்கை தாக்கல் செய்து, அது தொடர்பில் கடந்த மாதம் 29ம் திகதி நீதிமன்றில் விளக்கமளித்தது.
இதனை அடுத்து, நளினி முருகனை விடுவிக்க முடியாது என தமிழக அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம், சட்ட பூர்வமானதும், சரியானதுமே என த ஹிந்து தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr