இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கண்டியில் கள்ள வாக்குகள்; ஆளும் தரப்பினர் அட்டகாசம் : மனோ கணேசன் தெரிவிப்பு

JKR  வியாழன், 8 ஏப்ரல், 2010

கண்டி மாவட்டத்திலுள்ள பல்வேறு வாக்கெடுப்பு நிலையங்களில் ஆளும் கட்சியினரால் பலவந்தமாக கள்ள வாக்குகள் அளிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் மனோ கணேசன் சற்று முன்னர் எமது   இணையத் தளத்துக்குத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் பெரும்பாலான வாக்கெடுப்பு நிலையங்களில் ஆளும் கட்சியினரின் குண்டர்கள் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
தொலஸ்பாகே, அலுகல்ல, இவல்கொல்ல, பரகல, ஹெலிவுன்ன, மாவத்துர, திம்புல்பிட்டிய ஆகிய வாக்கெடுப்பு நிலையங்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு ஆளும் கட்சியினருக்கு சார்பாக வாக்குகள் அளிக்கப்பட்டு வருவதாக மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் செயலகப் பொறுப்பாளராகச் செயற்படும் ஜோசப் மைக்கல் பெரேரா ஊடாக தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நாவலப்பிட்டி, கண்டி, காலி போன்ற இடங்களில் இன்று பல தேர்தல் மோசடிகள் நடைப்பெற்றுள்ளன. இம் முறை பொதுதேர்தலானது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைப்பெற்ற போதும் மேற்குறிப்பிட்ட சில இடங்களில் தேர்தல் மோசடி சம்வங்கள் பல நடைப்பெற்றுள்ளன.
எனவே நாவலப்பிட்டி, கண்டி, காலி போன்ற இடங்களில் நடைப்பெற்ற தேர்தல் தோசடிகள் குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று சற்றுமுன் நடைப்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr