இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வன்னி தேர்தல் களம்

JKR  திங்கள், 5 ஏப்ரல், 2010


 

வவுனியா பிரச்சார மேடையில் ஜனாதிபதி
வவுனியா பிரச்சார மேடையில் ஜனாதிபதி
இலங்கையின் வடக்கே வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் 252 வேட்பாளர்கள் களத்தில் குதித்திருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் முறியடிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறுகின்ற இந்தத் தேர்தலை மிக முக்கியமானதாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருதுகின்றார்கள்.
வேட்பாளர்கள் மேடைப் பிரச்சாரங்கள் முடிந்து, வாக்காளர்களைத் தேடி வீடுகளுக்குச் சென்று வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள்.
பல்வேறு வகையான அழுத்தங்களின் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக வேட்பாளர்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.
இடைத்தங்கல் முகாம் மக்களின் எதிர்பார்ப்புகள்
முகாம்களில் சிறார்கள்
முகாம்களில் சிறார்கள்
இடைத்தங்கல் முகாம்களுக்கு பல்வேறு கட்சிகளையும், சுயேட்சை குழுக்களையும் சேர்ந்தவர்கள் பிரச்சாரத்திற்காக வந்து செல்வதாகத் தெரிவிக்கும் அங்குள்ள மக்கள், சிலர் தம்மை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் கூறுகின்றனர்.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற சூழலில் வாக்களிக்கும் உரிமையை இழந்திருந்த தாம், இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
அன்றாடப் பிரச்சினைகள் தொடங்கி அரசியல் பிரச்சினைகள் வரையில் அனைத்திற்கும் தீர்வு காண்பதற்காகவே இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக வேட்பாளர்கள் கூறுகிறார்கள்.
ஆயினும் இடம்பெயர்ந்த வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சொந்தக் கிராமங்களில் இயல்பான சூழலில் தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் விரைந்து செய்யப்பட வேண்டும் என்பதே வன்னி மாவட்ட வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr