இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் தோழர் அ. வரதராஜப்பெருமாள் சந்தித்தார்

JKR  சனி, 3 ஏப்ரல், 2010

வரதராஜப்பெருமாள் 
varatharajaperumalயாழ் மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் கூட்டம் இன்று (01) யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் அல்பிரெட் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் பிராந்திய செயலாளர் தோழர் மோகன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
பெருமளவு அங்கத்தவர்களை கொண்ட இது போன்ற சங்கங்கள் தொடர்ந்து செயற்படுவது சாதனையாகும். நான் அரசியல் கட்சி ஒன்றை சார்ந்தவனாக இருந்த போதும் இந்த சங்கத்திற்குள் எமது அரசியல் கருத்துக்களை திணிப்பது எங்கள் நோக்கமில்லை. இந்த சங்கத்தின் உறுப்பினர்களான தொழிலாளர்கள், அது சார்ந்த சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்காகவும் நாமும் பங்களிக்க வேண்டும் என்ற எமது கட்சியின் நோக்கத்தை ஈடுசெய்யும் வகையிலேயே இந்த சங்க கூட்டத்தில் கலந்துகொண் டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பொது அமைப்புக்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் காணப்படுவது இயல்பானது. ஆனால், சங்கத்தின் நலன் கருதியும், சங்கம் சார்ந்த சமூகத்தின் நலன் கருதியும் அவற்றை சுமுகமான முறையில் தீர்த்து கூட்டாக செயற்படுவது சங்கத்தின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும் எனவும் குறிப்பிட்டார்.
சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் 200; க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் மேற்படி மண்டபத்தில் சந்தித்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மூத்த தலைவருமான தோழர் அ. வரதராஜப்பெருமாள் அவர்கள் அங்கு உரையாற்றும் போது
நீங்கள் பல்வேறு இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளானபோது நான் உங்கள் மத்தியில் இருக்கவில்லை ஆயினும் இந்த மண்ணினதும், மக்களினதும் நினைவுகளோடு வாழ்ந்திருந்தேன் நான் பிறந்து, வளர்ந்த சொந்த நிலத்திற்கு வருவதற்கான காலம் வராதா  என்ற ஏக்கத்துடன் காத்திருந்தேன் அந்த சந்தர்ப்பம் வாய்த்திருப்பதுடன் இன்று உங்களோடு கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என கண்களில் நீர்பனிக்க தெரிவித்தார்.
இந்தியா தனிநாட்டை எடுத்துத் தராது ஆனால், இந்தியா தமிழ் மக்கள் மீது இன்னமும் அனுதாபம் கொண்டிருக்கின்றது. இந்தியாவுடன் எனக்குள்ள உறவை பயன்படுத்தி உங்களுடைய அபிப்பிராயங்களை நான் எடுத்துச் சொல்வேன். வேறெந்த தமிழ் தலைவர்களை விடவும் என்னால் இவ்விடயத்தில் காத்திரமாகச் செயற்பட முடியும் என்பதை உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr