இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் முக்கியஸ்தர்கள் வவுனியா மக்களுடன் சந்திப்பு-

JKR  சனி, 3 ஏப்ரல், 2010

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் இன்றுமுற்பகல் நொச்சிமோட்டை மற்றும் புளியங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் என்பவை தொடர்பில் கேட்டறிந்து கொண்ட புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள், இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அடிப்படைத் தேவைகள் யாவும் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்தனர். அத்துடன் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மீள்குடியமர்ந்துள்ள மக்கள் தமது விவசாய நடவடிக்கைகள் மற்றும் தொழில்களை ஆரம்பிப்பதற்கு அத்தியாவசிய உதவிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், இப்பகுதி பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை மேம்படுத்தவும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. இப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்குத் தேவையாகவுள்ளது. எனவே பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்றும் புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கூமாங்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது அப்பகுதி மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், கடந்த காலங்களில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள், குடியேற்றங்கள் உள்ளிட்ட கட்சியின் பணிகளை எடுத்து விளக்கியதுடன், தொடர்ந்தும் அப்பணிகளை முன்னெடுப்பதற்கு மக்களின் ஆதரவு வேண்டுமென்றும் எனவே பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr