இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எங்கள் தலைவிதியை நாங்களே நிர்ணயிக்கும் நேரம்.. -ந.தீபன் (வாசகர் கருத்து)

JKR  புதன், 7 ஏப்ரல், 2010


இலங்கைத்தமிழ் மக்கள் நீண்டகாலத்திற்கு பின்பு ஓரளவான ஐனநாயக சூழலில் தங்கள் தலைவிதியை நிர்ணயித்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்தந் தேர்தல் அமைந்துள்ளது. இத்தேர்தலில் என்றும் இல்லாத அளவுக்கு கட்சிகளும், சுயேட்சைகளுமாக பலர் போட்டியிடுகின்றனர். இதை ஒரு ஐனநாயக சூழல் என்று சொன்னாலும். சில ஆசனங்களுக்காக பல நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கு பற்றுவது தமிழ்மக்களைப் பொறுத்தவiயில் ஆபத்தான விடயமே. இதில் தமிழ் பிரதேசங்களில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற பலர் தமிழ்கடசிகளில் நம்பிக்கை இழந்து தமிழர்களுக்கு ஒரு நல்ல தலைமையை கொடுக்க வேண்டுமென்ற நோக்கமோ அல்லது அதற்கு தகுதியோ இல்லாதவர்கள் இதில் சிலர் மக்களோடு வாழாது வெளிநாடுகளில் தங்கள் குடும்பங்களோடு சுகபோகமாக  வாழ்பவர்கள் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் தமது இடம் நோக்கி சென்றுவிடுவர். எங்கள் வாழ்வோடு விளையாட விடுமுறையில் வந்தவர்கள். எமது மக்களின் இவ்வளவு கால துன்ப துயரங்களையும் மறந்து மனம் நோவாது தங்களின் சுய லாபங்களுக்காக ஆளும் முதலாளி வர்க்கத்திடம் விலைபோன தொழிலாளி பாட்டாளிவர்க்கத்தினருக்கு எதிரானவர்களே. இவர்களை மக்கள் இனங்கண்டு  கல்லால் அடிக்காது வாக்கால் அடிக்க வேண்டும் (நிராகரிக்கவேண்டும்).
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இலங்கை அரசுடன் பேரம் பேசும் சக்தியாக தாமே இருக்கவேண்டும் இருக்கமுடியும். உலக அரங்கில் எமக்கு செல்வாக்குள்ளது சாதிக்க முடியும் என்றும். தேசியம், சுயநிர்ணயம் , தன்னாட்சி இவையெல்லாம் இவ்வளவு காலமும் புலிகள் பேசியவை அதற்கு முன்பு நாங்கள் பேசியை ஆகவே மீண்டும் அதைபேசுகின்ற உரிமை எமக்குத்தான் உண்டு இதுபற்றியெல்லாம் பேச யாருக்கும் தெரியாது உரிமையும் இல்லை என்ற போக்கிலும் கூட்டமைப்பினர் பேசுகினம். அத்தோடு நின்று விடாது 60வது ஆண்டுகாலமாகப் போராடிவருகின்றோம் அரசியல் போராட்டம் தோற்றதால் தான் ஆயதப்போரட்டம் தொடங்கியது. இப்போது ஆயதப்போராட்டமும் தோற்றுவிட்டது. அரசியல் வழியில் தான் போராடி உரிமையைப் பெற முடியும் ஆகவே தோற்றப்போன ஆயுதப்போராட்டத்திற்கு முன் தோற்றுப்போனதாக ஒத்துக்கொள்ளும்  தாங்களது வழிக்கு மீண்டும் வாருங்கள் என்கிறார்கள். தோற்றுப்போன வழி மீண்டும் தோற்றுப்போனால் தோற்றுப்போன ஆயுதப்போராட்டம் மீண்டும் தோற்றம் பெறும் என்று எச்சரிக்கையும் விடுகிறார்கள். இதுவரை தமிழ் மக்களின் உரிமைப்போருக்கு பல வழிகளிலும் ஆப்பு வைத்த அப்புக்காத்துக்கள்.
புலி ஆதிக்கம் இருக்கும் வரை தங்களை கூட்டுகுள் அடைத்துக் கொண்டு காட்டுக்குள் இருந்த புலிகளை வாழ்த்தி போற்றி வாக்காலத்து வாங்கி புலிகளின் முன்னாள் துரோகிகள் புலிகளால் கொல்லப்படும் மற்றையவர்களை துரோகிகள் என வசைபாடிக்கொண்டு இரத்தக்கறை படிந்தவர்களை புலிகளுக்கு பயத்தில் கட்டிப்பிடித்துக்கொண்டு புலிகளின் இரத்தம் தோய்ந்த கைகளுடன் கைகோர்த்து தமது ஈன உயிரையும் பணத்திற்கான பதவியை தக்கவைத்துக்கொண்டு இந்த அரசுகளுடன் பேசமாட்டோம் இவர்களுடன் என்ன பேச இருக்கிறது தனிநாட்டை இவர்கள் தருவார்களா? பிரபாகரன் வழியில் தனி நாடு பிடிக்க முடியும் என்றவர்கள் இனிமேல் யாருடன் எதைப்பற்றி பேசுப்போகின்றார்கள். பேரம் பேசக் கூடியகாலங்களில் தங்கள் நலனைமட்டும் பேசிவர்கள். புலிகளின் ஆயுதபலமும் புலிகளால் பிச்சையாக வழங்கப்பட்ட அரசியல் பலமும் இருந்தபோதும் மக்கள் நலன் பற்றி பேசாது புலிநலன்  பற்றி பேசியவர்கள் இனிமேல் தான் தமிழர் நலன் பற்றி வீரமாகப் பேசப்போகின்றார்களாம்.
மற்றையவர்களை ஒட்டு, கூட்டு குழுக்கள் துரோகிகள் என்றவர்கள். எத்தனை ஆயிரம் தமிழர்களை விடுதலையின் பெயரால் தங்கள் நலனுக்காக பலிகொடுத்தும், பலியெடுத்ததும் போக மீதிப்பேரின் வாழ்வை பல வழிகளிலும் முடமாக்கிய புலிகளில் இருந்த தலைகளும் வால்களும். மக்கள் நலனற்று தங்கள் நலனுக்காக புலிக் கூட்டில் இருந்த கூட்டாளிகளும் எதிரி என்று கூறிய முதலாளித்துவ  அரசுடன் கூட்டுவைத்தும், ஒட்டியம், சரணாகதியாகியும் வாழும் நிலையில் யாரை துரோகி என்கிறார்கள். இன்று வெட்டவெளிச்சத்தில் துரோகிகளும் ஒட்டுக்குழுக்களுமாக தம்மவர்களே இருப்பதனால.; அந்த சொல்லாடல்களையே பன்படுத்தாது அகற்றிவிடவேண்டும் என்று கொலைவெறி முறமல் உறுமிய புலிகளும் அவைசார்ந்த கூட்டங்களும்  முணகிப் பேசுவதையும் எமுதுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
எங்களது பிரச்சனையை தாங்கள் தான் முன்பு உலகறியச் செய்தவர்கள் என்று கூறியவர்கள். புலிகள் தான் உலகறியச்செய்தவர்கள் என்று இன்று கூறுகின்றார்கள். இலங்கைத்தமிழரை புலிகள் உலகறியச் செய்த விசித்திரம் யாவரும் அறிந்ததுதானே. தாங்கள் வென்றதும் தமிழருக்கான தீர்வை உலகம் தங்களிடம் தங்கத்தாம்பாழத்தில் வைத்து தரக்காத்திருக்கிறது  என்றும் மக்களுக்கு புலு(லி)டாவிடுகிறர்கள்.
துராகண்ணோட்டமற்ற பதவியாசை, வாழ்வாசை பிடித்த புலித்தலைமைகள் இறுதியுத்தத்தில் முன்னின்று போராடாது ஆயிரக்கணக்கில் அப்பாவி இளைஞர் யுவதிகளை முன்தள்ளியும் . மக்களை கேடயமாக்கி பின்னொளித்து இருந்தபொழுது. அன்று கூட்டுப்பற்றி பீத்தி புலிகள் போட்ட பிச்சை சுபோகத்தை மக்களின் பெயரால் கூறுபோட்ட கூட்டமைப்பு   கூட்டம் இன்று கூறு கூறாய் போய் புலிகளின் உறுமல்களுக்கு தாங்கள் தான் சொந்தக்காரர்கள் என்று குடுமிச்சண்டை பிடித்தக்கொண்டு தெருத்தெருவாய் அலைந்து வாசல் தோறும் கையெடுத்துக் கும்பிடுபோட்டு வாக்குப்பிச்சை கேட்கும் கூட்டம். புலிகள் மக்களை மரணப் பொறிக்கிடங்குக்குள் கொண்டு போன போது தடுத்து நிறுத்த முடியாத கையாலாகாதவர்கள். அந்த மக்களுக்காக வீதியில் இறங்கி போராடாதவர்கள் மக்கள் மரணித்த இடங்களுக்கு இன்று வரை செல்லாதவர்கள். மரணத்தில் இருந்து தப்பிவந்த மக்களை அரவணைத்து உதாவாதவர்கள். அவர்களின் இரத்தக்கறை தம்மீது பட்டுவிடும் என வெளிநாட்டில் பாதுகாப்பாக இருந்து ஓப்பனைக்கு ஒப்பாரிவைத்தவர்களும் ஓசையே இல்லாமல் ஒளித்திருந்தவர்களும். புலிகளால் பிழையான போரட்டத்தின் பாதையில் அழைத்துச் செல்லப்பட்டு எதிரியின் முட்கம்பி வேலிகளுக்குள் சரணடையவைக்கப்பட்ட மக்களை பார்த்து தேர்தலுக்காக ஓ நாய் போல் அழுகின்றார்கள். உங்களுக்கு எதிரி என்று கூறும் அரசிடம் இருந்து உங்களின் பிதி நிதிகள் என்ற பெயரால் பெறும் பணத்தில் ஒருநாள் சம்பளத்தை தன்னும் உங்களுக்காக செலவழித்தார்களா? தெரியாது. கொலைக்களத்துக்கு அனுப்பியவங்களும் அதற்கு பலவழிகளிலும் உதவியவங்களும் சொல்லுகிறாங்கள் கொல்பவனே காக்கவேண்டுமாம்.
அனைவருக்கும் நஞ்சை கொடுத்தவர்கள் நெஞ்சை நிமிர்த்திப் போராடாது நஞ்சiயும் அருந்திசாவாது மனைவிமாருடன் எங்கள் மக்களின் சவமேறிக்கடந்து சரணாகதியாகி செத்த கோழைகளின் வீரம் பற்றி பேசுகிறார்கள் இவர்களும் கோழைகள். போராட்ட வழி வந்தவர்கள் போராடத்தூண்டியவர்கள் இன்றும் போராடுவோம் என புலிபோல் உறுமும் நரிகள் ஒன்று கூட களத்தில் அம்மக்களுக்காய் போராடிச்சாகவில்லையே.
மக்களே! உங்களை உசுப்பேச்சி உணர்ச்சியின் வெளிம்புக்குக் கொண்டு சென்று தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு உங்களை சாகவிடுவது இவர்களுக்கு கைவந்த கலை 60 வருட வரலாற்றை திரும்பிப்பாருங்கள் புலிக்கு வக்காலத்து வாங்குபவர்கள், அரசுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அத்தனைபேரினதும் தில்லு முல்லும் புரியும் இவர்களில் பல பேர் புதிய, பழைய பேர்களிலும் பழைய, புதிய முகங்களுடன் உங்கள் மத்தியில் உலாவருகின்றார்கள்.
இந்நிலையில் புளொட் அமைப்பானது கடந்துபோன 30வருடகாலம் தலை விரித்தாடிய கொடுர பாசிஸ வெறியாட்டம், அரச அடக்குமுறை மற்றைவர்களின் சதி முயற்சிகள் அந்தனைக்கும் முகங் கொடுத்து  பல உறுப்பினர்களை பலிகொடுத்து விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுடன் முதலாளித்தவத்திற்கும், பாசிஸத்திற்கும் அடிபணியாது சாதுரியமாக
இயன்றவரை மக்களையும், தேசங்களையும் பாதுகாத்து கடந்தகாலங்களில் புளொட் தனது அரசியல் பிரிவான ஐனநாயகமக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்டு நகரசபைகள், பிரதேசசபைகளை பொறுப்பெற்ற காலங்களிலும், பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தகாலங்களிலும் பாடசாலைகள் ,வைத்தியசாலைகள், நூல் நிலையங்கள் ,பூங்காக்கள் வீடமைப்புதிட்டங்கள் தெருக்கள்  தமிழ் அறிஞர்சிலைகள் என அவர்கள் செய்த பல காரியங்கள் இன்றும் சான்றுபகிரும் சாட்சியங்களாக உள்ளன.
யுத்தம் நடக்கிறது என்றோ? தாம் கொல்லப்படுகின்றோம் என்றோ? ஓழித்து ஓடாது இன்றுவரை மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகின்றார்கள். இப்போராட்ட காலகட்டத்தில் தங்களுக்கு இக்கட்டான காலகட்டங்களில் இவர்களுடைய உதவியை நாடாத அமைப்புக்கள், கட்சிகள் இல்லையென்றே கூறலாம் தங்கள் கட்சிகளால் கைவிடப்பட்ட பல தனி அரசியல் நபர்களுக்கு கூட ஆபத்தில் கைகொடுத்து உதவியவர்கள்.
புளொட்டில் இருந்து விலகியவர்களுடன் கூட முரண்படாத விட்டக்கொடுப்புடனான நட்பை கடைப்பிடித்து வருகின்றது இது ஒரு முன்மாதிரியான ஐனநாயகத்தன்மையாகும்.
மக்கள் நலனில் அக்கரையுள்ளவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சென்ற ஆண்டு 2009 இறுதியுத்தநேரம் உணவு உடை அத்தியாவசியப் பொருட்கள் என தங்கள் வசதிக்கும் மீறி செய்தவர்கள் இறுதிநாட்களில் மக்களை திரட்டி அம்மக்களுக்கு உணவழித்தவர்கள். இன்றுவரை பல ஆயிரம் சேவைகளை மக்களுக்காக செய்து வந்தவர்கள் மக்களுக்கு செய்ததை சொல்லிக்காட்டக் கூடாது என வெளியில் கூறாது உள்ளவர்கள் அதனால் பல விடயங்கள் பலருக்கு இன்றும் தெரியாமல் உள்ளது உண்மை. ஆரம்பத்தில் காந்தியத்தினூடாக தாம்தொடங்கிய மக்கள் சேவையை மக்களோடு மக்களாக  நின்று இன்றுவரை செய்து வருபவர்கள் நாளையும் செய்வார்கள்.
இவர்கள் இப்படி செயற்படுவதற்கான காரணம் எதுவெனப்பார்த்தால் தலைவர்கள் இருந்த போதும் தனிநபர் விசுவாசம் இல்லாது கட்சியின் கொள்கைசார்ந்து செயற்படுவதாலும். தற்பெருமை இல்லா தலைவர்கள் அவ்வமைப்பை தலைதாங்கியதாலும், தாங்குவதாலும் ஆகும். தங்கள் அமைப்பு விட்ட தவறுகளை தலைவர்கள், தோழர்கள் ஏற்றுக்கொள்வதாலும். தமிழர்களின் நலனை முன்நிறுத்தி அனைவரும் இத்தேர்தலில் புதுக் கூட்டை உருவாக்கி ஒன்றினைந்து போட்டியிட்டால் நல்லது என புளொட்டின் தலைவர் திரு.சித்தார்த்தன் த.தே.கூட்டமைப்பை கேட்டபொழுது உங்கள் கட்சியில் நீங்கள் மட்டும் விரும்பினால் எம்முடன் வரலாம் என்றனராம் அப்போது கோபத்துடன் சித்தார்த்தன் அவர்கள் அதைமறுத்து நான் உங்களுடன் வந்தால் எமது கட்சி தோழர்களின் நிலையென்ன? என கேள்வி எழுப்பினாராம் கூட்டமைப்பிடம் பதில் இல்லை எண்ணத்தை பார்த்தீர்களா?
யாழ்பாணத்தில் இருந்து போராடுவது கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிவதற்கு சமன்.
சகோதரத்துவயுத்தம் எதிரிக்கு எப்படி வாய்பாக அமையும்.
முஸ்லீம், சிங்ள மக்களுடனான உறவுகள் எப்படி இருக்கவேண்டும் அவர்களும் இப்போராட்டத்திற்கு உதவவேண்டும் அவர்களை பகைத்தால் நாம் ஒருபோது வெல்லமுடியாது.
உலகநாடுகளின் ஆதரவை எப்படி நாம் பெறவேண்டும் பயன்படுத்த வேண்டும்.
திட்டமிடாமல் மக்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டாமல் செயய்யப்படும் தாக்குதல்கள் எதிரியை எப்படி பலமடையச்செய்யும்.
அண்டை நாடுகள் உலகநாடுகளை நாங்கள் எப்படி கையாளவேண்டும் அதில் தவறு விட்டால் இலங்கை அரசுக்கு அது எப்படி சாதகமாய் அமையும் அதன் முடிவு என்னவாகும்.
எப்படி எமது மக்களையும் மண்ணையும் பாதுகாப்பது இதில் தவறு விட்டால் விளைவு என்னாகும்.
இப்படி பல தீக்கதரிசனங்களை தூரப்பார்வையோடும் விடுதலை நோக்கோடும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் மறைந்த தோழர் உமாமகேஸ்வரன் சொன்ன பொழுது எள்ளி நகையாடியவர்களின் நிலையென்ன எமது மக்களின் நிலையென்ன விடுதலையின் நிiயென்ன என்பதை நாம் அனைவரும் அனுபவித்து உணர்ந்துவிட்ட பின்பும் தவறான பாதையில் பயணிக்கலாமா?
மேலும் அறிய இலண்டனில் இருந்து வந்த மடல் ஒன்ற இத்துடன் இணக்கின்றேன்.
எதிர்ப்பு அரசியல் அணுகுமுறைகளை வலிந்து கட்டிக்கொள்வதனால் தமிழர்களின் தேசிய இனப் பண்புகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுகிறன. எமது அடிப்படை உரிமைகளுக்கான வழிமுறைகளை முன்னெடுக்கக்கூடிய நடைமுறைக்கு தேவையான அரசியல் கோட்பாடுகளை முன்னெடுப்பதுடன் , இன்பத்திலும் துன்பத்திலும் மக்களுடன் இணைந்து மக்களை விட்டகலாது மண்ணைப் பாதுகாத்து செயல்பட்டு வருகின்றோம். வெறும் வாய்சொல்லில் தேசியம் தேடுபவர்கள் தமது நீண்ட அரசியல் வாழ்க்கைக்காகவும் அதனூடான சுயலாபங்களுக்காகவும் நடைமுறைக்கு அப்பாலான எதிர்ப்பு அரசியல் அணுகுமுறைகளை வலிந்து கட்டிக்கொள்வதனால் தமிழர்களின் தேசிய இனப் பண்புகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வருவதையே தொடர்ச்சியாக நாம் கண்டு வந்துள்ளோம். பேரினவாதம் எம் நிலங்களை அபகரிக்கவும் எமது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு தொடர்சியாக இடம்பெயரவும் எமது சமூகக்கட்டமைப்புகளும் இனப்பரம்பலும் சின்னாபின்னப்படவும்;கூடிய நடவடிக்கைகள் எதுவும் எமது தேசியத்தைக் காக்கும் நடவடிக்கைகளல்ல.
யுத்தத்தினால் இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள அழிவுகளைத்தான் 1990ல் வவுனியாவிலும்; குறிப்பாக வவுனியா நாரிலும் காணமுடிந்தது. வவுனியாவில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். எல்லைப்புறக் கிராமங்களில் தமிழ் மக்கள் வாழமுடியாத நிலை. இந்த நேரத்தில் புளொட் அமைப்பினராகிய நாங்கள் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும்; அழிந்த இடங்களை சீரமைத்து மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளகுடியேற உதவிகள் செய்தோம் . எல்லைப்புற மக்கள் அச்சமின்றி வாழ வழிவகுத்தோம்.
இன்று வடக்கு கிழக்கில் இராணுவ பாதுகாப்பு பிரதேசங்கள் உருவாக்கப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அந்த நிலை வவுனியாவில் 1990ல் ஏற்பட இருந்தது .விமான நிலைய விஸ்தரிப்பு, இராணுவ தள விஸ்தரிப்பு என சுற்றியுள்ள கிராமங்களை அரசு உரிமையாக்க முயன்றது. நாங்கள் அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி பல போராட்டங்களை நடத்தினோம். குறிப்பாக பாராளுமன்றத்தின் முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தி விமான நிலைய விஸ்தரிப்பு, இராணுவ தள விஸ்தரிப்பு என அரசின் அந்த முயற்சிகளை தடுத்து நிறுத்தினோம்.
அரசின் திட்டம் நிறைவேறியிருந்தால் வவுனியா நகரைச் சுற்றியுள்ள றம்பைக்குளம், கோவில் புதுக்குளம் மற்றும் எல்லையப்பர் குளம், சமளம்குளம், போன்ற கிராமங்களும் பறிபோயிருக்கும்.  இன்று முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ,மற்றும் விமானத்தளமாக விளங்கும் வவுனியா விமானத்தளத்தின் எல்லைகளிலேயே மக்கள் அச்சம் இன்றி வாழ்வதை காணமுடிகிறது. இதே நிலை வன்னியில் ஏற்படவேண்டும் என்பது எமது உடனடி வேலைத்திட்டமாகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை முதலிடத்தை வகித்தாலும் உடனடித்தீர்வாக எதிர்பார்ப்பது அகதி வாழ்க்கையிலிருந்து மீண்டு தாம் தமது சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதேயாகும்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்போம். அதற்காக மக்களின் அவலங்களில் அரசியல் செய்வதை நிராகரிப்போம்.
அழிந்துபோயுள்ள எமது பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவோம்.. அதற்காக எமது மக்களை அடகு வைத்து சோரம் போகமாட்டோம்.
தமிழ் தேசியம் என்பது ஒவ்வொரு தமிழனதும் பிறப்புரிமை. அதற்காக அதை வைத்து சுயலாப அரசியல் செய்யமாட்டோம்.
எமது தாயகத்தினை சூழ்ந்துள்ள ஆரோக்கியமற்ற அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதுடன் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்லவும் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு புதிய அத்திவாரமாக அமையும் என நம்புகிறோம்.
நம்மை ஆட்சி செய்யத்துடிக்கும் இவர்களை நம்பி மீண்டும் நம் தலையில் நாமே மண்ணள்ளி போடுவதா? அல்லது மக்களை நேசிக்கும் சக்திகளை இனம்கண்டு ஆதரவழித்து நாமே நம்மை ஆட்சிசெய்வதா?
தாயகத்து உறவுகளே! புலம்பெயர் உறவுகளே! இத்தேர்தலிலே தோழர் உமா சிந்தனையுடன் புளொட்டும் தோழர் நாபாவின் சமூகவிடுதலை, இனவிடுதலை சிந்தனைகளுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் நாபா அணியும் இணைந்து புளொட்டின் அரசியல் பிரிவான ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சின்னமான நங்கூரம் சின்னத்தில் தோழர் சித்தார்த்தன் தலமையிலும்  ஈ.பி.ஆர்.எல்.எவ் நாபா அணியின் மெழுகுதிரி சின்னத்தில் தோழர் சிறி(சுகு) தலைமயிலும் முற்போக்கு சிந்தனைகளுடன் போட்டியிடும் வேட்பாளாகளை தெரிவு செய்து புதியபாதையில் அவைரும் இணைந்து எம்மக்களின் வாழ்வுக்கு புது யுகம் படைப்போம்.
ஓன்றாய் நாம் இல்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை – தோழர் உமாமகேஸ்வரன்.
தோழமையுடன்.. கழக ஆதரவாளர்கள் சர்பாக.. ந.தீபன்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr