அக்கறைப்பற்று ஆளையடிவேம்பு பகுதியில் சற்றுமுன்னர் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தேர்தலின் பின்னரான வன்முறைகள் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக கண்காணிப்பாளர்கள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.
இதேவேளை, நாவலப்பிட்டியவில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான வாக்கெடுப்பு நிலையங்களில் கள்ளவாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் அதனால் குறிப்பிட்ட வாக்கெடுப்பு நிலையங்களின் முடிவுகளை இரத்துச் செய்யுமாறும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 15 பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் தேர்தல் கண்காணிப்பாளர் மீது நாவலப்பிட்டியவில் தாக்குதல் வாக்கெடுப்பு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தேர்தல்களை கண்காணிக்கும் ஊடக மத்திய நிலையத்தின் அதிகாரியொருவர் நாவலப்பிட்டியவில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் பலவந்தமாக வாக்கெடுப்பு நிலையத்துக்குள் நுழைய முற்பட்டவேளை அதனைத் தடுக்க முயன்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிலையத்தின் இணைப்பாளர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக