இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தமிழர் தாயகத்தில் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வே தேவை கூட்டமைப்பின் நல்லூர்க் கூட்டத்தில் மாவை அறிவிப்பு

JKR  திங்கள், 5 ஏப்ரல், 2010



தமிழ் மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில்
தமிழ் பேசும் மக்கள் ஆட்சி செய்யும் தன்னாட்சி உரிமையை அங்கீ கரிக்கும் வகையிலான
அரசியல் தீர்வு ஒன்றே இன்றைய தேவை.
அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. அதனை நாடியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்கும்; அதற்காகவே பாடுபடும்.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அதனை மனத்தில் இருத்தி தமது முழு ஆதரவையும் எமக்கு வழங்கவேண்டும்.                                                                       இவ்வாறு அழைப்பு விடுத்திருக்கின் றார் தமிழரசுக்கட்சியின் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர்களில் ஒருவருமான மாவை சேனாதி ராஐõ.

நல்லூர் சட்டநாதர் கோவில் வீதியில் நேற்றுமாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசுகையில் மாவை சேனாதிராஐõ மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கையில் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் தமிழரசு, சிங்கள அரசுகள் என  மூன்று தேசங்களும் அரசுகளும் இருந்துள்ளன.
போரினால் மூன்று அரசுகளையும் இணைத்த ஆங்கில அரசு 1948 இல் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கிய பொழுது சிங்களவருடைய இறைமை சிங்களவரிடம் சென்ற பொழுது, தமிழர் இறைமை தமிழ் மக்களிடம் வந்துவிட்டது என்பதே நிலைப்பாடாகும்.
உண்மையில் இறைமை (குணிதிஞுணூஞுடிஞ்ணடிtதூ) மக்களிடமே உள்ளது. இறைமை மக்களின் பிறப்புரிமை. இதுவரை காலமும் இலங்கையில் ஒற்றையாட்சிக்கோ, சிங்கள அரசுக்கோ, இலங்கையில் வரையப்பட்ட எந்த அரசியலமைப்புக்கோ தமிழ் மக்கள் தங்கள் சம்மதத்தைக் கொடுக்கவில்லை. அரசிடம் இறைமையை மக்கள்  இதுவரை காலமும் தான் கொடுக்கிறார்கள்.
அதே போன்று தான் தமிழ்த் தேசிய இனத்திற்கு உரித்தான சுயநிர்ணய உரிமைத் தத்துவமும், தமிழ்மக்கள் தங்கள் எதிர்கால அரசியல் ஆட்சி பற்றித் தீர்மானிக்கும் உரிமையை வழங்குகின்றது.
வரலாற்று ரீதியான வளமான தமிழ் மொழி,கலை, கலாசாரம், தனியான பண்பாடு கொண்ட தமிழினம் பாரம்பரியமான நிலத்தொடர்ச்சியுள்ள வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம் கொண்ட தமிழினம் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு உரித்துடையது.
தமிழ் மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் ஆட்சி பற்றிய எதிர்காலத்தைத் தீர்மானிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அரசுடனும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தத்திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பேச்சுக்கள் நடத்தப்பட்டுமுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2004 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தீர்மானமான வாசகம் ""அரசியல் தீர்வு ஏற்படும் வரை காத்திராது, போரினால் சிதைந்து போன தமிழர் தாயகத்தையும் சீரழிந்து போன தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களையும் கட்டியெழுப்பப் புனர்வாழ்வு, புனரமைப்பு  நடவடிக்கைகளின் பொருட்டு'' ஒரு இடைக் காலத் தன்னாட்சி அதிகாரசபை நிறுவப்படவேண்டும் என வற்புறுத்தப்பட்டிருந்தது. இப் பிரேரணையை தமிழீழ விடுதலைப் புலிகள் 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன் படிக்கையின் பின் முன்வைத்தனர்.
ஒஸ்லோ  அறிக்கை
அத்துடன் 2003 ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கையும் ஏற்பட்டது. அந்த ஒஸ்லோ உடன் படிக்கையை வரவேற்ற இந்தியா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட 51 நாடுகள் தமிழர் தாயகத்தின் (வடக்கு கிழக்கின்) புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக 45,000 கோடி ரூபா (4.5 பில்லியன் டொலர்) உதவ உறுதியளித்தன.
"உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பில் தமிழர் தாயகத்தில் தன்னாட்சி  ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்' என உடன்படிக்கை ஏற்பட்டது. இதனை ஜப்பான் டோக்கியோ பிரகடனமும் வற்புறுத்தியது.
அன்று அரசுக்கு சமமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்தாயகத்தில் நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். களநிலை பலமான சமமான தளத்தில் இருந்தது.
2009 மே மாதத்தின் பின் களநிலை மாறியுள்ளது. அரசியல் சமநிலை பாதிக்கப் பட்டுள்ளது. தமிழ் மக்கள் வரலாறு காணாத மனிதப் பேரவலத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர். பல்லாயிரம் தமிழ் உயிர்கள் முள்ளி வாய்காலில் பலியிடப்பட்டுள்ளன. பல லட்சம் மக்கள் குற்றுயிராக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்திற்குமதிகமானோர் அனா தரவாய் பிச்சைக்காரர்களாய் விடப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் சிங்கள இராணுவத் தளபதிகளிடம் விடப்பட்டுள்ளன. தமிழர் பிரதிநிதிகளிடம் (தமிழர்) நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடம் அந்த புனர்வாழ்வுக் கட்டமைப்பு அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஜனாதிபதிக்கு அந்த எண்ணமில்லை.
பௌத்த சிங்கள தேசத்தை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம்
ஜனாதிபதி ""ஒரே நாடு ஒரே மக்கள் '' என ஒரு பௌத்த சிங்கள தேசத்தை உரு வாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் செயல்படுகிறார்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டை நிராகரித்து, வடக்கையும் கிழக்கையும் பிரித்து கிழக்கைச் சிங்கள மயமாக்கும் திட்டத்தைத் தீவிரப்படுத்தி வரும் அதே நேரம் வடக்கை இராணுவ மயமாக்கிச் சிங்கள மயமாக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளார்.
தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. மீள்குடியேற்றத்திற்கு உயர்பாதுகாப்பு வலயங்களும், பெருந்தொகை இராணுவப் பிரச்சன்னமும் தடையாக உள்ளன.
இதனால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உயர்பாதுகாப்பு வலயங்களும், பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் அகற்றப்படவேண்டம் என  வற்புறுத் துகின்றது.
 தமிழ் மக்களுக்கான அரசியல் வேலைத் திட்டத்தை நாம் மிகுந்த பொறுப் புணர்ச்சியுடன் முன்வைத்த பொழுது சிங்களத் தீவிரவாதத் தலைவர்கள் எம்மைத் தடைசெய்ய வேண்டுமெனக் கூக்குரலிடுகின்றனர். அதேவேளை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு விசுவாசம் தெரிவித்துவிட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்த ஜீ.ஜீ.பி. குழு நாம் தேசியத்தை விட்டு விட்டோமென்று புரட்டுக்களைப் பரப்பி வருகின்றது. எம்மைத் தோற்கடிப்பதே தம் இலக்கு என்கிறது.
அடுத்து ஒஸ்லோ உடன்படிக்கையை பரீட்சித்துக் கூடப்பார்க்க இடமிருக்க வில்லை என்ற கருத்து சர்வதேச இராஜதந்திரிகளிடமிருக்கிறது. அந்த உடன்படிக்கை முன் னெடுக்கப்பட்டிருந்தால் இத்தனை பேரவலம் ஏற்பட்டிருக்காது என்ற கருத்தும் அவர் களிடம் இருந்தது.
இப்பொழுது மிகப் பாரிய மனிதப் பேரவலத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழர் தேசம்,தமிழ் மக்கள் இருக்கின்ற நிலையில் ஒஸ்லோ உடன்படிக்கையிலிருந்து அரசியல் தீர்வொன்றைக் காணப் பேச்சுத் தொடங்கினால் என்ன என்ற ஒரு கருத்தும் உண்டு.2003இல் 51 நாடுகள் தமிழர் புனர்வாழ்வுக்கும் , தொழில்துறைகளைக் கட்டியெழுப்பவும், அபிவிருத்திக்குமாகவும் 4.5 பில்லியன் டொலர் வழங்க முன்வந்தன.
வெளிநாடுகளின் உதவி அதிகம் தேவை
இன்று,  2009  இல் வன்னியில் இடம்பெற்ற பேரவலம் 2004 ஐ விட நூறுமடங்கு பாரியது.இப்போது 51 நாடுகளினதும் இந்தியாவினதும் உதவிகள் பல மடங்கு தேவை. மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இவ்வுதவிகள் அவசியம் தேவை. 2004 தேர்தல் அறிக்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் வரை காத்திராமல் புனர்வாழ்வு நடவடிக்கைகள் உட்பட உடனடி தேவைகளை நிறைவுசெய்ய ஒரு ""இடைக்கால தன்னாட்சி அதிகார சபை'' வேண்டுமென்று விடுதலைப் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு தீர்மானத்தை முன்வைத்தன. அந்தக் கட்டமைப்பு 2009 இன் பின் மிகவும் அவசியமாகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு ஒன்றுக்கான அடிப்படைக் கொள்கைகளைக் கோடிட்டுக் காட்டும் அதேவேளை உடனடிப் பிரச்சினைகளான மீள் குடியேற்றம்,புனர்வாழ்வு நடவடிக்கை அதற்காக உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுதல் வேண்டும்.பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் 1983 இன் நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கின்றது. சரணடைந்ததாகக் கூறப்படும் தமிழ் இளைஞர்கள் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பன போன்ற பல எதிர்கால வேலைத் திட்டங்களையும் அறிவித்துள்ளோம்.
பரந்துபட்ட முன்னணி தேவை
தேர்தல் முடிவடைந்ததும் "பரந்துபட்ட முன்னணி' முஸ்லிம் மற்றும் மலையகப் பிரதிநிதிகளை உள்ளடக்கி உருவாக்கப்படுவதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம்.
ஏனெனில் மஹிந்த சிந்தனையாளர் தமிழ் முஸ்லிம் மக்கள் தாயகத்தில் வாழு மிடங்களில் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மைக் குடிப்பரம்பலை மாற்றி யமைத்து,சிறுபான்மையினராக்கும் வகையில் சிங்கள இராணுவ,சிங்கள மக்கள் குடி யிருப்புக்களைத் தமிழ் பேசும் மக்கள் பிரதேசங்களில் கட்டமைக்கவுள்ளனர். பௌத்த கலாசார அடையாளங்களைப் பரவலாக்கவுள்ளனர். முதலில் இராணுவ மயமாக்கிப் பின் னர் சிங்கள மயமாக்கி இதுவரை பலமாயிருந்த தமிழ்ப் பேசும் மக்கள் பிரதேசங்களில் தமிழ்பேசும் மக்களின் உரிமை குரல் ஜனநாயக ரீதியிலும் இனிமேல் எழக்கூடாது என்று  அரசு திட்டமிட்டுச் செயல்படுகின்றது.
முறியடிக்கப்பட வேண்டும்
இச் செயற்பாடுகளுக்கும், இதுவரை மஹிந்த ராஜபக்ஷவின் செயல்திட்டங்க ளுக்கும்,போர்க் குற்றங்களுக்கும் ஆதரவளித்துவரும் பிரதிநிதிகளை தமிழ் பேசும் மக்களிடமிருந்து இத் தேர்தலில் தேர்வு செய்து பொம்மை நிர்வாகத்தினை வடக்கிலும் ஏற்படுத்தவும் உதிரிக் கட்சிகளையும், சுயேச்சைகளையும் தாராளமாகத் தேர்தல் களத்தில் இறக்கியுள்ள ஜனாதிபதியின் இத் திட்டம்  முறியடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மக்கள் நன்குணர்ந்துள்ளனர்.
எனவே தான் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையை தமிழர் தேசத்தை இராணுவ மயமாக்கும்,சிங்கள மயமாக்கும்  நிகழ்ச்சித் திட்டத்தை தடுத்து நிறுத்தவும்; தமிழர் தாயகத்தில் தமிழ்பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தன்னாட்சி செய்யும் உரிமையை நிலைநாட்டவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  ஆதரித்து ஏப்ரல் 8ஆம் திகதி அதன் சின்னம்,தமிழரசுக் கட்சியின் சின்னம் வீட்டிற்குப் பக்கத்திலே உங்கள் வாக்கை,புள்ளடியிட்டு வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் .
இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் இந்தியாவுக்கும் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட ஜனநாயக பலத்தையும் எடுத்துக்காட்ட வேண்டும். அது தமிழ் பேசும் மக்களின் அரசியற் பலத்தை அதிகரிப்பதாக அமையும்.அரசியல் தீர்வுக்கும்,உடனடித் தேவைகளை நிறைவேற்றவும்,உதவியாய் அமையும் என நம்புகிறோம்.ஒவ்வொரு வாக்கையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வீட்டுச் சின்னத்திற்கும் வழங்குமாறு வேண்டுகின்றோம்.  இத் தருணத்தில் இது தமிழர்களின் தலையாய கடமையாகும் என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr