இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செனல் 4 காட்சி குறித்து விசாரிக்கும் முதல் கடமை இலங்கைக்கே உள்ளது: இந்தியா

JKR  புதன், 14 மார்ச், 2012


லங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியுள்ள காட்சிகள் குறித்து விசாரிக்கப் படவேண்டியது அவசியம். அதை இலங்கைதான் செய்தாக வேண்டும். அதற்குத்தான் முதல் கடமை உள்ளது. இதை இலங்கை செய்யும் என்று நம்புகிறோம்' என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று அறிவித்துள்ளார்.
அத்துடன், 'இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பை அடிப்படையாகக் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்தியா முடிவெடுக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாட்டை விலக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் நேற்று செவ்வாய்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரினால் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு அடங்கிய அறிக்கையொன்று இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அவரால் உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது. இதன்போது அங்கு உரையாற்றிய கிருஷ்ணா, மேலும் கூறியதாவது, 'அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்து, இந்தியா இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பு இருக்கிறது. அந்த நட்புறவில் விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் இந்தியா தனது முடிவை எடுக்கும். இலங்கை அரசாங்கத்துடனான எமது ஆக்கபூர்வமான உறவு மற்றும் எமது உதவித் திட்டங்கள் காரணமாகவே அங்கு தமிழ்ப் பிரதேசங்களில் வழமை நிலைமை திரும்பியுள்ளது. அவசரகால சட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடந்துள்ள பின்னணியில் பல வகையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு நாம் எதை செய்தோம், அது இலங்கை தமிழ் மக்களின் நலன்களையும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி, மீள்கட்டுமானம் என்பவற்றையும் கருத்தில் கொண்டே செய்யப்படுகின்றது. இலங்கை, குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. தேசிய மனித உரிமைகள் வேலைத்திட்டத்தின் முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கவென அமைச்சரவை உப குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழு மீண்டும் தொழிற்படத் தொடங்கியுள்ளது. அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழு கூறியபடி மனித உரிமை மீறல்களை விசாரிக்கவென இலங்கை பாதுகாப்புத் துறை 'விசாரணை நிதிமன்றம்' ஒன்றை அமைத்துள்ளது. தமிழ் சமுதாயத்தின் மனத் தாக்கங்களைத் தீர்க்கும் வகையில் உண்மையான நல்லிணக்க செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் அவசியத்தை இலங்கை அரசாங்கத்திடம் நாம் வற்புறுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளிலிருந்தும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை இலங்கைக்கு வருமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நாம் இந்த விஜயத்தை விரைவில் மேற்கொள்ளவுள்ளோம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, மதிப்பு, நீதி மற்றும் சுயமரியாதை வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றில் வெளிப்படுத்திய இந்த உணர்வினை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்று உறுதியளிக்கிறேன். ஐ.நா. மனித உரிமை தீர்மானம் குறித்து இறுதி முடிவெடுக்கும்போது, அதுபற்றி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும். இலங்கை தொடர்பாக இந்திய அரசு எது செய்தாலும், அது இலங்கைத் தமிழர்களின் நலன்களையும், நல்வாழ்வையும் கருத்தில் கொண்டே செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது. இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியுள்ள காட்சிகள் குறித்து விசாரிக்கப் படவேண்டியது அவசியம். அதை இலங்கைதான் செய்தாக வேண்டும். அதற்குத்தான் முதல் கடமை உள்ளது. இதை இலங்கை செய்யும் என்று நம்புகிறோம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் தற்போது அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் குறித்து உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து நிதானித்துத்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், இலங்கையுடன் நமக்கு வரலாற்று ரீதியான உறவு, நட்பு உள்ளது. அது பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அதேபோல இலங்கையில் நடந்து வரும் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பிரச்சினை மேலும் பெரிதாகிவிடக் கூடாது. கசப்புணர்வு அதிகரித்துவிடக் கூடாது' என்றார் கிருஷ்ணா.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr