இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யுத்தத்தில் வெளிநாட்டு உதவிகளை இலங்கை ஒருபோதும் பெறவில்லை: ஜனாதிபதி

JKR  வெள்ளி, 16 மார்ச், 2012


யங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு ஆலோசனைகளை நாடவோ வெளிநாட்டு துருப்புகளை ஈடுபடுத்தவோ இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறியுள்ளார்.
எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதி கூறினார். '... எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், புனரமைப்பு மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் வெளிநாட்டு தலையீடுகளோ அல்லது அவர்களின் அறிவுறுத்தல்களோ இந்நாட்டிற்கு அவசியமில்லை' என அவர் கூறினார். 'எமது வீரம்மிக்க படையினரால் மாத்திரம் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களின்படி இந்த யுத்தத்தில் போரிட்டு வென்றனர். அவர்கள் எமது தளபதிகளால் நெறிப்படுத்தப்பட்டனர். தனது சொந்த கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களால் நாட்டை முன்னேற்றுவதற்கான ஆற்றலையும் வலிமையையும் அறிவையும் இலங்கை கொண்டுள்ளது. இந்நாட்டை எவ்வாறு நடத்த வேண்டும் எமது பிரச்சினைகளை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை' என ஜனாதிபதி தெரிவித்தார். 'அனைத்து இலங்கையர்களும் அவர்கள் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு எந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜெனீவாவில் ஏற்படுத்தப்பட்டதைப்போன்ற சூழ்நிலைக்கு எதிராக எழ வேண்டும். நாட்டை பாதுகாப்பதற்கு மக்களுடன் கிளர்ந்தெழ வேண்டியது எதிர்கட்சிகளின் கடமையாகும். எதிர்கட்சிகளும் அனைத்து இலங்கையர்களும் அவர்களின் இனம், சாதி, மதம், அரசியல் என்பவற்றை மறந்துவிட்டு இத்தருணத்தில் இணைந்து ஒரே மக்களாக இப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும்" என அவர் கூறினார். "நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் என்றவகையில், எமது பிரச்சினைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீரத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சமாதானத்தின் பலன்களை இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்கள் அனுபவிக்க முடியும்" எனவும் ஜனாதிபதி கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr