இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றம்; தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு

JKR  வியாழன், 22 மார்ச், 2012


ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை' நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது. இப்பிரேரணையாது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நாம் நம்புகிறோம்' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் பிரேரணையும் மனித உரிமை பேரவையின் தீர்மானமும், அரசாங்கமானது தற்போதைய நிலையிலிருந்து விலகி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான காத்திரமான முடிவுகளை எடுப்பதற்;கும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உணரப்படக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏவும் எனவும்; நம்புகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பானது மனித உரிமை கூட்டத்தொடரின் 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையின்' நிறைவேற்றத்தினை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முதற்;கட்ட படியாக கருதுகிறது. 19ஆவது மனித உரிமை கூட்டத்தொடரின் 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையின்'; நிறைவேற்றமானது தமிழ் மக்கள் நேச நாடுகளுடன் நெருங்கிய தொடர்பை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இப்பிரேரணையானது நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்ப நேரடியாக இப்பிரேரணையோடு தொடர்புபட்டிருந்த நாடுகளுடன் கூட்டத்தொடருக்கு முன்னரும் கூட்டத்தொடரின் போதும் பல்வேறு தொடர்பாடல்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தது. இந்தப் பிரேரணையை நிறைவேற்றுகிற கருமத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடனும் இராஐதந்திர தீர்க்கதரிசனத்துடனும் செயற்பபட்டதென்பது இப்பொழுது எமது மக்களுக்கு தெளிவாகியிருக்குமென்று நாம் நம்புகிறோம். தொடர்ந்தும் தமிழ் மக்களின் நலனில் மட்டும் அக்கறை கொண்டவர்களாக பொறுப்பாகவும் நிதானமாகவும் செயற்படுவோம் என எமது மக்களுக்கு உறுதி கூறுகிறோம். அரசியல் இலாபம் பெறும் நோக்குடனும்; மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும் நோக்குடனும் செயற்படுகிறவர்களின் பிரச்சாரத்தை நம்பாமல் எமது ஐனநாயக சக்தியாக தொடாந்தும் செயற்பபடுமாறு எமது மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr