இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு!

JKR  புதன், 14 மார்ச், 2012

ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டை விரைவில் நடாத்துவதென்றும் அதற்கென கட்சியின் மத்திய குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாநாட்டுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகல பிராந்திய அமைப்பாளர்களுக்கும் மாநாடு குறித்த அறிவித்தலை அனுப்பி வைத்துள்ளாரெனவும் கட்சியின் மாநாட்டிற்கான ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் எங்கள் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவும் வேண்டிய வரலாற்றுக் கடமையென்பது எம்மீது சுமந்தப்பட்டுள்ளது. சுமைகளைத் தாங்கி நடக்கவும் தடைகளைத் தாண்டி உழைக்கவும் நாம் எமது கட்சியை செப்பனிட்டு புனரமைத்து மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த இலக்கினை அடைவதற்கு கட்சியின் அடுத்த தேசிய மாநாட்டை நடத்துவது அவசியமானதென்பதால் மாநாட்டிற்கான ஏற்பாட்டுக் குழுவொன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு தோழர் மித்திரன் தோழர் இராசமாணிக்கம் தோழர் கந்தையா சங்கரன் (வின்சன்) தோழர் விந்தன் தோழர் மு.சந்திரகுமார் (அசோக்) தோழர் பசுபதி சீவரத்தினம் (கி.பி.) தோழர் கே.சுப்பையா தோழர் சந்துரு தோழர் இப்னு அஸமத் (பாரூக்) ஆகியோர் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கி.பி. அவர்களின் தலைமையில் கூடிய மாநாட்டுக் குழுவினர் மாநாட்டிற்கான திட்டமிடல்களையும் தீர்மானங்களையும் வகுத்துள்ளனர். தேசிய மாநாட்டை நடாத்துவதற்கு முன்பாக கட்சியின் பிராந்திய மாநாடுகளை நடாத்த வேண்டுமென்றும் அதன் பிரகாரம் கி;ழக்குப் பிராந்தியம் வன்னிப் பிராந்தியம் யாழ் பிராந்தியம் மற்றும் சர்வதேசப் பிராந்தியம் என அனைத்துப் பிராந்தியங்களும் தனித்தனியாக பிராந்திய மாநாடுகளை நடாத்த வேண்டுமென்றும் பிராந்திய மாநாட்டுத் தீர்மானங்களை மாநாட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தீர்மானங்கள் யாவும் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் கட்சியின் அனைத்து பிராந்திய அமைப்பாளர்களுக்கும் மாநாட்டிற்கான அறிவிப்புக்கள் செயலாளர் நாயகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிராந்திய மாநாடுகளை நடாத்துவதற்கான திகதியை அந்தந்தப் பிராந்தியங்களே தீர்மானிக்க வேண்டுமென்றும் அதன் பின்னர் தேசிய மாநாட்டை நடாத்துவதற்கான திகதியை மாநாட்டுக் குழுவினரால் தீர்மானிக்கப்படுமென்றும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் பிராந்திய மாநாட்டுகளுக்கு முன்பதாக கட்சியின் பிராந்திய செயற்பாட்டு அறிக்கையினை பிராந்திய அமைப்பாளர்கள் தயாரிக்க வேண்டுமென்றும் இதேவேளை எதிர்காலத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை கட்சியின் பிராந்தியங்கள் தனித்தனியாக கூடி ஆராய்ந்து அவற்றையும் மார்ச் மாத இறுதிக்குள் செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகல பிராந்தியங்களுக்கும் அறிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்கள் அரசியல் சமவுரிமையை அடைவதற்காகவும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் பொருளாதார சமூத்துவத்தை ஏற்படுத்தவும் கட்சியைப் புனரமைத்து பலப்படுத்தும் எமது தேசிய மாநாடு எழுச்சி மிகு வெற்றியை தரும் என்பதுடன் எதிர்காலத்தில் எமது மக்களின் அரசியலில் பலமான மாற்றங்களை உருவாக்க கட்சியை நோக்கி அனைவரும் அணிதிரள வேண்டுமென்றும் கட்சியின் மாநாட்டுக் குழு விடுத்துள்ள அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr