இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெனீவா மாநாட்டில் நாம் கலந்து கொண்டமைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ள மறுத்தமைக்கும் இடையிலான வேறுபாடு என்ன?...- காரைநகரில் ஈ.பி.டிபி சர்வதேச முக்கியஸ்தர் தோழர் விந்தன்!

JKR  புதன், 21 மார்ச், 2012


ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் எமது தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளிப்படையாகவே கலந்து கொண்டமைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கபடத்தனமாக கலந்து கொள்ள மறுத்தமைக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பதை தமிழ் மக்கள் இலகுவாகவே புரிந்து கொண்டுள்ளனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் தோழர் விந்தன் அவர்கள் எடுத்து விளக்கியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (20) காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினரும் அப்பிரதேச ஈ.பி.டி.பி. இணைப்பாளருமான தோழர் ரஜனி அவர்களின் ஏற்பாட்டிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நிதி ஒதுக்கீட்டிலும் 70 விவசாயிகளுக்கான தெளிகருவிகள் மற்றும்; மாற்று வலுவுள்ளோருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த தோழர் விந்தன் அவர்கள் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் நாம் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாக வெளிப்படையாகவே அரசாங்கத்துடன் கைகுலுக்கி நிற்கிறோம். இதில் உண்மையும் நேர்மையும் உண்டு. கபடம் இல்லை. பொய்;மை இல்லை. தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்காகவும் எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவும் ஒரு நல்லெண்ண சமிஞ்ஞை தொடர்ந்தும் அரசாங்கத்திடம் வெளிப்படுத்துவதற்காகவே எமது தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கிறார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சராக மட்டுமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதியாகவுமே எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜெனீவா சென்றுள்ளார். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வழமைபோல் உள்ளே சென்று அரசாங்கத்துடன் ஒட்டுறவாக பேசிவிட்டு தாம் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்து வருவதனூடாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவே முன்வந்துள்ளனர். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எமது வழிக்கே வந்துள்ளனர் என்பதை உலகம் உணர்ந்துள்ளது. ஆயினும் எமது வழிமுறையில் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் உண்டு. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வழிமுறையில் அவர்களது வழமையான கபட நாடகங்களே வெளிப்படுகிறது. தமிழ் மக்களுக்கு ஒரு கருத்தும் அரசாங்கத்திடம் இன்னொரு கருத்தையும் கூறும் சந்தர்ப்பவாத முகங்களே அவர்களின் வழிமுறையில் தெரிகிறது. ஜெனீவா மாநாடு குறித்து தாம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை தமிழ் பேசும் மக்களுக்கு அவர்கள் தெளிவு படுத்தியிருக்கவில்லை. இந்த விடயத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களை வழிநடத்தி செல்ல தவறிவிட்டனர். தமக்கென்று சொந்த நிலைப்பாடு எதுவும் அற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று பிறரது நிலைப்பாட்டை தாம் ஆதரிப்பதாக தமிழ் மக்களுக்கு புலுடா விட்டுக்கொண்டிருக்கிறார்கள். எமது செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிமுறைகள் தமிழ் பேசும் மக்களுக்கு தொடர்ந்தும் ஒரு வழிகாட்டலை வழங்கி வருகிறது. ஜெனீவா மாநாடு குறித்து நாம் எடுத்திருக்கும் முடிவை இன்று சிலர் விமர்சிக்கலாம். அது குறித்து எமக்கு கவலை இல்லை. கடந்த காலங்களில் எமது வழிமுறையை தூற்றியவர்கள் இறுதியில் எமது வழிமுறைக்கே வந்துள்ளனர். அது போல் இன்றும் நாம் எடுத்திருக்கும் நிலைப்பாடும் எமது எண்ணங்களும் தொலைதூர சிந்தனைகளும் தமிழ் பேசும் மக்களை விடிந்தெழும் தேசத்தை நோக்கியே கொண்டு செல்லும். காலம் ஒரு நாள் இதை உணர்த்தும் இவ்வாறு தோழர் விந்தன் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார். இந் நிகழ்வில் தெளிகருவிகளையும் சக்கர நாற்காலிகளையும் பெற்றுச் சென்ற பயனாளிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் காரைநகர் பிரதேச சபை உறுப்பினரும் அப் பிரதேச இணைப்பாளருமான ரஜனி அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.













0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr