இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

விதி படப் பாணியில் யாழில் பெண் ஒருவர் போராட்டம்!

JKR  புதன், 21 மார்ச், 2012


ன்னை ஏமாற்றிய இளைஞர் ஒருவருக்கு எதிராக, யாழ் பெண் ஒருவர் ஊடகப் போர் ஒன்றை ஆரம்பித்துள்ளார். பேஸ்புக் தொடக்கம் அனைத்து ஊடகங்களின் உதவியை இவர் நாடியுள்ளார்.
வாருங்கள் மேட்டருக்குப் போகலாம்! நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு மற்றொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்து இருக்கின்ற இளைஞனுக்கு எதிராக பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார் யாழ்ப்பாணத்தில் மட்டுவிலைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர். இந்த யுவதி அனு என்கிற பெயரால் அறியப்படுகின்றார். இவருக்கு வயது 25. சென்னையில் உயர் கல்வி பயின்றவர். மட்டுவில் நுணாவில் வைரவர் கோவிலடியைச் சேர்ந்தவர் இந்திரபவன் சியந்தன். இவருக்கும் வயது 25. இவரும் சென்னை வந்து அனு பயின்ற அதேகல்லூரியிலேயே படித்து இருக்கின்றார். இருவருக்கும் இடையிலான பழக்கம், நெருக்கம் ஆகியன காதலாக வளர்ந்தன. கணவன் மனைவியாக 2009 ஆம் ஆண்டு முதல் சென்னையில் ஒரே வீட்டில் வாழ்ந்து இருக்கின்றனர் இவர்கள். பின்னர் 2010 ஆம் ஆண்டு பகிரங்கமாக பரஸ்பரம் மோதிரம் மாற்றி இருக்கின்றார்கள். அனுவிடம் இருந்து மூன்று இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம், தங்க நகைகள், கார் ஆகியன உட்பட பெறுமதி மிக்க ஏராளமான பொருட்களை சீதனம் என்கிற பெயரில் கறந்து வந்து இருக்கின்றார் சியந்தன். ஆனால் சில மாதங்களுக்கு முன் நாட்டுக்கு(இலங்கைக்கு) திரும்பி வந்த சியந்தனுக்கு, ஊரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது. அனுவுடன் ஆன தொடர்பை மெல்ல மெல்ல விலத்தி இருக்கின்றார். தகவல் அறிந்த அனு இந்தியாவில் இருந்து திரும்பி வந்து சியந்தனின் வீட்டுக்குகூட சென்று நீதி கோரி இருக்கின்றார். சியந்தனோ, சியந்தனின் குடும்பத்தினரோ இவர் மீது இரக்கம் காட்டவில்லை. இவரை மனைவியாக ஏற்க மாட்டார் என்று சியந்தன் சொல்லி விட்டார். சியந்தனால் இவருக்கு பல தடவைகள் படுகொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு இருக்கின்றன. அத்துடன் சியந்தன் இவரை படுகொலை செய்கின்றமைக்கு குறைந்தது இரு தடவைகள் முயற்சித்தமையுடன் தாக்கியும் உள்ளார். சியந்தனின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சியந்தனின் நண்பர்கள் இவருடன் தொலைபேசியில் படு ஆபாசமாக பேசி இருக்கின்றனர். சியந்தனுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் மேற்கொண்டார் அனு. இந்நிலையில் அனுவை சிறிது காலத்தின் பின் திருமணம் செய்து கொள்வார் என்று பொலிஸில் உத்தரவாதம் வழங்கி இருக்கின்றார் சியந்தன். ஒற்றுமையாக இருக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர் பொலிஸார். ஆனால் கடந்த மாத நடுப் பகுதியில் புதுப் பெண்ணுடன் ஓட்டம் பிடித்து விட்டார் சியந்தன். சியந்தனுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட அனுவின் சார்பில் தாபரிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. விதிப் படப் பாணியில் இவர் தற்போது போராடி வருகிறார். இந் நபரிடம் வேறு பெண்களும் சிக்கி சின்னாபின்னமாகக் கூடாது என்பதனால், இவ்விடையத்தை நாம் பிரசுரித்துள்ளோம்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr