இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மாணவியை கடத்துவதாக அச்சுறுத்தி 20 மில்லியன் கப்பம் பெற்றவர்கள் கைது

JKR  சனி, 24 ஜூலை, 2010

மாணவியை கடத்தப் போவதாக அச்சுறுத்தி கப்பப்பணம் பெற்ற இருவர் மாத்தளை அக்குரம்பொற பகுதியில் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு சந்தேக நபர்களையும் 20 மில்லியன் ரூபா பணத்துடன் மாத்தளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர். எனினும் இன்னுமொரு சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

மேற்படி நபர்கள் குறித்த மாணவியின் பெற்றோரிடம் 20 மில்லியன் ரூபா பணம் தரும்படியும் அவ்வாறில்லாவிட்டால் மகளை கடத்துவதாகவும் அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது கை துப்பாக்கி ஒன்று வைத்திருந்தாகவும் அத்துடன் தப்பியோடிய சந்தேக நபர் விட்டுச் சென்ற இலங்கையில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் மாத்தளை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதற்கு முன்னர் குறித்த மாணவியின் வீட்டில் இதே சந்தேக நபர்கள் திருட முற்பட்ட போது மாணவியின் தாய் சப்தமிட்டதனால் அவர்கள் ஒடி விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr