இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நெடுந்தீவில் தலை வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

JKR  சனி, 24 ஜூலை, 2010

நெடுந்தீவு கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத சடலம் ஒன்று தலைவெட்டப்பட்ட நிலையில் கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 வயது மதிக்கத் தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவுப் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர். ஊர்காவற்துறை நீதிபதி இ.வசந்தசேனனின் கவனத்திற்கும் இது விவரம் தெரிவிக்கப்பட்டது.
ஊர்காவற்துறைக்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட நீதிபதி, அதனை அடையாளம் காணவும் பிரேத பரிசோதனை நடத்தவும் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி கட்டளையிட்டார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr