இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஓகஸ்ட் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் சீமான்

JKR  சனி, 24 ஜூலை, 2010

பிரிவினை வாதத்தினை தூண்டும் விதத்தில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சீமான், வேலூர் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். இவர்மீது இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தினை மீறிய குற்றமும் பதிவுசெய்யப்பட்டது.

அதற்கமைய சீமானின் காவல் நீடிப்பு தொடர்பாக நேற்று ஜோர்ஜ்டவுன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை பரிசீலித்த நீதிபதி எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதிவரை சீமானை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதற்கமைய அவர் மீண்டும் வேலூர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இயக்குநர் சீமானை நீதிமன்றுக்கு கொண்டுவரும்போது நீதிமன்ற வாசலில் ஒன்றுகூடிய நாம் தமிழர் அமைப்பு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr