இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வவுனியாவிலுள்ள அரச காணிகளில் அத்துமீறி குடியிருப்பவர்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

JKR  செவ்வாய், 19 அக்டோபர், 2010

னியாவிலுள்ள அரசாங்க காணிகளிலும் அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளிலும் அத்துமீறி குடியிருப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு வவுனியாவில் இன்று நடைபெற்ற வடமாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

அத்துடன், ஏ - 9 வீதியின் திருத்த அபிவிருத்தி வேலைகளை விரைவில் முடிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் இணையத்தளத்திற்கு இன்று அவர் கூறினார்.
இதுவரையில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டதுடன், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் குறைநிறைகளையும் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இரண்டு மணித்தியாலமாக நடைபெற்ற வடமாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அரசாங்க அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, ஓமந்தை புகையிரத நிலையத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்று பார்வையிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr