இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மங்கள இசை வாத்தியக் கலைஞர்கள் 12 பேருக்கு அமைச்சர் நிதியுதவி!

JKR  செவ்வாய், 28 டிசம்பர், 2010

தாவடியைச் சேர்ந்த மங்கள இசை வாத்தியக் கலைஞர்கள் 12 பேருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிதியுதவி வழங்கி கௌரவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தாவடியைச் சேர்ந்த தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் 12 பேருக்கும் இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கலைச் சேவையை கௌரவிக்கும் முகமாக அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் வைத்துஇந்நிதியுதவி வழங்கப்பட்டது.
இம்மாதம் 24ம் 25ம் 26ம் திகதிகளில் தாவடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பேரவை நடத்திய எம்.ஜி.ஆர் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாளின் போது இக்கலைஞர்கள் மங்கள இசை வழங்கியிருந்தனர்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா காசோலைகள் வழங்கப்பட்டன.
காசோலைகளை ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவர் விஜயகாந் ஆகியோர் அமைச்சர் முன்னிலையில் கலைஞர்களுக்கு வழங்கி வைத்தனர்.
மகேஸ்வரி நிதியத்திலிருந்து இந்நிதி வழங்கப்படுவதாகவும் கலை மென்மேலும் சிறந்து விளங்க தாம் வாழ்த்துவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.









0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr