இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

குடாநாட்டில் மீண்டும் வீதிச்சோதனை ஆரம்பம்

JKR  புதன், 29 டிசம்பர், 2010

யாழ். மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குடாநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக நவாலி , ]சங்கானை, சித்தன்கேணி , தொடிலடி, மாசியப்பிட்டி, அளவெட்டி போன்ற பகுதிகளில் இவ்வாறான சோதனைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்குறிப்பிட்ட இடங்களில் இராணுவத்தினரால் வீதிகளில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் சிறிய ரக வாகனங்கள் வழி மறிக்கப்பட்டு வாகன சாரதியின் அடையாள அட்டை இலக்கம், வாகனத்தின் இலக்கம் என்பன பதிவு செய்யப்படுகின்றன.
இந்தப் பதிவு நடவடிக்கைகள் இராணுவ உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாகவே தாம் மேற்கொள்வதாக வீதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவிக்கின்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr