இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை பிற்போக்கான செயற்பாடு: இன்னர் சிற்றி பிரஸ்

JKR  புதன், 29 டிசம்பர், 2010

லங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்ந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என கடந்த 17ஆம் திகதி பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.
எனினும் கடந்த 23ஆம் திகதி இந்தக்குழு இலங்கைக்கு செல்வது குறித்த திட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை என, சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிட்டி பிரஸிடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெறவிருந்த ஐக்கிய நாடுகள் சபையில் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் பல கேள்விகளை எழுப்புவதாக இருந்தது.
எனினும் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதன் பின்னர், அதற்கான விளக்கத்தைக்கோரி, இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிற்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.
செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும், நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் தொடர்பிலான விளக்கம் என்பவை குறித்து அந்த கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
எனினும் அதற்கு இந்தக் கூட்டம் ரத்து செய்யபட்டதுடன், மீண்டும் நாளை தொடரும் என நான்கே வார்த்தைகளில் பர்ஹான் ஹக் பதில் வழங்கி இருந்தாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. _

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr