இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அசான்ச் அல்ல; அமெரிக்காதான் பொறுப்பு

JKR  புதன், 8 டிசம்பர், 2010

கசிய ராஜீயத் தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டமைக்கு சட்ட ரீதியில் பதில் சொல்ல வேண்டியது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தோற்றுநர் ஜூலியன் அசான்ச் அல்ல அமெரிக்காதான் என ஆஸ்திரேலிய அரசாங்கம் பழிசுமத்தியுள்ளது.

இதற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அரசாங்கம் தமது நாட்டின் குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் பிறந்தவரான விக்கிலீக்ஸின் தோற்றுநர் ஜூலியன் அசான்ச்சை இவ்விவகாரம் தொடர்பில் அதிகம் விமர்சித்தே வந்துள்ளது. அவர் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் செயல்பட்டுள்ளார் என்று நாட்டின் தற்போதையப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் ஜூலியாவுக்கு முன்பாக இவ்வாண்டின் முற்பகுதி வரையில் பிரதமராக இருந்தவரான தற்போதைய வெளியுறவு அமைச்சர் கெவின் ரட், அசான்ச்சுக்கு ஆதரவான ஒரு கருத்தாகத் தோன்றும் ஒரு விஷயத்தை தற்போது சொல்லியிருக்கின்றார்.
ராய்டர்ஸ் நிறுவனத்துக்கு ரட் அளித்துள்ள ஒரு பேட்டியில், அமெரிக்க ராஜீய தகவல்கள் வலையமைப்பிலிருந்து ரகசிய தகவல்கள் அனுமதியின்றி கசிந்தமைக்கு விக்கிலீக்ஸ் தோற்றுநர் பொறுப்பல்ல அமெரிக்கர்கள்தான் அதற்கு பொறுப்பாவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தில் இப்படியான ரகசியத் தகவல்களைப் பேணுவதில் உள்ள பாதுகாப்பு போதுமானதுதானா என்று அவர் கேள்வியெழுப்பினார்.
இப்படியான ரகசியத் தகவல்களைப் பார்க்க நெடுங்காலமாக யார் யாருக்கெல்லலாம் அனுமதி இருந்து வந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
தகவல்கள் வெளியானமைக்கு சட்டரீதியில் பொறுப்பேற்க வேண்டியவர் அசான்ச் அல்ல மாறாக முதலில் இந்த ஆவணங்களைக் கசியவிட்டவர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேன்பர்ராவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்களில் இடம்பெற்றிருந்த ரகசியத் தகவல்கள் வெளியான அதே நாளில் ரட் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.
ரட் அவர்களை "அடிக்கடி பிழைகள் செய்யும் - எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் குணமுடையவர்" அதிலும் குறிப்பாக தான் கவனம் செலுத்தும் வெளியுறவு விவகாரங்களில் ரட் இவ்வாறு நடந்துகொள்ளக்கூடியவர் என்று கசிந்துள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தூற்றுதல் பற்றியெல்லாம் தான் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்று ரட் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் அசான்ச்சுக்கு வெளிநாட்டிலுள்ள ஆஸ்திரேலியர் என்ற முறையில் தூதரக அடிப்படையிலான சட்ட உதவிகளை தாம் வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது.
அமெரிக்காவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியமைக்காக ஜூலியன் அசான்ச் நியாயமின்றி நடத்தப்படுகிறார் என்ற உணர்வு ஆஸ்திரேலியாவில் பலரிடையே மேலோங்கிவருவதாகத் தெரிகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr