இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ராசாவின் வீடுகளில் அதிரடி சோதனை

JKR  புதன், 8 டிசம்பர், 2010

தொலைத் தொடர்புத் துறையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் இல்லம் மற்றும் அத்துறையின் முன்னாள் அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் புதனன்று சோதனை நடத்தினார்கள்.

டெல்லி மற்றும் தமிழகத்தில் உள்ள ராசாவின் வீடுகளிலும், அவருக்கு நெருக்கமானவர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றுள்ளது.
புதன் காலையில் துவங்கிய சோதனை மாலை வரை நடைபெற்றது.
ராசாவின் வீடு தவிர அவரது தனிச் செயலராகப் பணியாற்றி வந்த ஆர்.கே. சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, தொலைத் தொடர்பு ஆணைய உறுப்பனர் கே. ஷ்ரீதர், தொலைத் தொடர்புத்துறை துணை டைரக்டர் ஜெனரல் ஏ.கே. ஷ்ரீவத்ஸவா ஆகியோரது வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றன.
சென்னையில் ராசாவுக்கு நெருக்கமானவர்களில் ஒருவராகக் கருதப்படும் சாதிக் பாட்சாவின் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள்.
ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூர் அருகே உள்ள சக்கரமனைவேலூரில், அவரது சகோதரரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். பெரம்பலூரில் அவரது சகோதரியிடம் விசாரணை நடைபெற்றது.
டெல்லி மற்றும் தமிழகத்தில் 14 இடங்களில் சோதனைகள் நடைபெற்றதாகவும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணையை 2001-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட வேண்டும் என்றும் அதுபற்றி சிபிஐ முடிவு செய்யட்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் விவரங்கள் வெளியாகலாம்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr