இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் : நடிகர் விஜய் கடிதம்

JKR  புதன், 3 ஏப்ரல், 2013


லங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். நடிகர் விஜய் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிர போரட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் போராட்டம் குறித்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர், ‘’தமிழ் உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எண்ணி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த உணர்வுகளை பயிர் செய்யும் விதத்தில் கலைஞர்கள் ஒன்று திரண்டு உங்கள்( சரத்குமார்) தலைமையில் உண்ணாவிரதம் நடத்துவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். இந்த போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள வேண்டு என்ற உணர்வு இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாதது குறித்து வருத்தமடைகிறேன். ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார் -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr