இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உங்கள் பலவீனம் என்ன?

JKR  புதன், 10 பிப்ரவரி, 2010


ஒவ்வொரு மனிதனுக்கும் வேறு வேறு கோணங்கள் உண்டு. தங்கள் பார்வை, கொள்கை, ரசனை என்று அடிப்படை குணங்களில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. தங்களுடைய பலங்களிலும், பலவீனங்களிலும் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். உங்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை புரிந்து கொண்டால் ஆற்றல் மிக்க விதத்தில் செயல்பட முடியும்.நம்மிடம் உள்ள சிறப்பு என்ன? மேம்பட்ட திறன் என்ன? என்பதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நம்முடைய செயல்முறைதான் ஒன்றை எளிதாக்குகிறது அல்லது கடினமாக உணர வைக்கிறது. செயல்முறையைப் பொறுத்தே ஒன்றை முன் கூட்டியே செய்ய முடிகிறது. அல்லது தாமதமாக செய்யும்படி ஆகிவிடுகிறது.
ஒரு பாணியில் அல்லது தொழிலில் செயலாற்றும் திறமை, உயர்நுணுக்க அறிவு மற்றும் ஆர்வத்தைப் பொறுத்தே உங்களுடைய வெற்றி அமையும்.

படிப்பில், வேலையில், சொந்த வாழ்க்கையில் உங்களுடைய மதிப்பீடு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சவாலான வேலை எது என்பதை தெரிந்து கொண்டு அதை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய சிறப்புத் தன்மை அதாவது நீங்கள் கற்பனைவாதியா, அல்லது எதையும் நுணுகி ஆராயும் தன்மை உள்ளவரா, அல்லது எந்திரத் தனமானவரா என்பதையும் உங்களுடைய ஆளுமை தன்மையையும் அறிந்து வைத்திருங்கள்.

குறிப்பாக உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்வது அவசியம். உடல் நலம் நன்றாக இல்லாவிட்டால் மனம் பாதிக்கப்படும். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் வேலையை செய்து முடிக்க முடியும்.

உங்களிடம் உள்ள தனித் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த ஆரோக்கியம் அவசியம். மனதை சமநிலையில் வைத்திருங்கள். மனதை இறுக்கமாகவோ, உளைச்சலாகவோ வைத்திருக்க வேண்டாம். வேலையின் தன்மைக் கேற்ப நேரத்தைப் பங்கீடு செய்து கொண்டால் அனாவசிய மன இறுக்கத்தை, உளைச்சலை தவிர்க்க முடியும்.

ஒரு வேலையை நீங்கள் தள்ளிப் போடுவது அதன் பின் தொடர்ச்சியாக பல வேலைகளைக் கிடப்பில் போடும்படி செய்து விடும். அதனால் உங்கள் சுமைதான் மேலும் அதிகரிக்கும். செயல் தாமதத்தால் விரும்பத்தகாத விளைவுகள், இழப்புகள் உண்டாகும். அலுவலகம் மட்டுமில்லை.

வீட்டிலும் வேலையையத் தள்ளிப் போடுகிற பழக்கம் வேண்டாம்.

பொறுமையின்மை, போதிய கவனமின்மை காரணமாக பின்னாளில் நாம் சுமைகளை சுமக்க வேண்டிய சூழல் ஏற்படும். உங்களுக்கு வெறுப்பூட்டும் பணியை முதலில் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அந்த வேலையின் மீது ஒரு விருப்பத்தை தோற்றுவித்து, விரும்புகிற மனோபாவத்தைப் பெறுங்கள்.

ஒரு வேலையை செய்யத் தொடங்கும்போது, இந்த வேலையை நம்மால் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் கொள்ள வேண்டாம். உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் தயக்கம் வந்து, அந்த வேலையை ஒதுக்கி விடுவீர்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் எப்படிச் செய்வது? நாம் செய்யும் வேலையை மற்றவர்கள் ஏற்பார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழும். மனச் சோர்வு எட்டிப் பார்க்கும்.

இது போன்ற வேலையை நேரம் எடுத்தாவது முழு மூச்சுடன் செய்து முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்த வேலையில் ஆர்வத்தை தூண்டி வேலையை முடிப்பது நல்லது.

எத்தனை நாளானாலும் இந்த வேலையை நாம்தான் செய்ய வேண்டியிருக்கும். நமக்குப் பதிலாக வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்பதை நீங்கள் மனதில் பதித்துக கொண்டால் அந்த வேலையைக் கண்டு தயங்க மாட்டீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக கலகலப்பாக இருப்பவர்களுடன் பழக்கம் வைத்துக் கொண்டால் அவர்களைப் போலவே உங்களுக்கும் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.

வேலையில் தவறு ஏற்படுமோ அல்லது இந்த வேலையில் தோல்வி ஏற்படுமோ என்ற அச்சம் ஒருபோதும் வேண்டாம். ‘வெற்றி நமதே’ என்ற எண்ணத்துடன் எந்த வேலையாக இருந்தாலும் உற்சாகத்துடன் பணி புரிந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr