இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இணையப்புரட்சியின் வெள்ளிவிழா தற்சமயம் கொண்டாடப்படுகின்றது

JKR  செவ்வாய், 16 மார்ச், 2010


இணையத்தளம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினங்களாக நேற்று முதல் எதிர்வரும் 25 ம் திகதிவரை முதன்முறையாக டொட் கொம் பதிவு செய்யபட்ட வெள்ளி விழா நிகழ்வு உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.



கடந்த 1985 ம் ஆண்டு மார்ச் மாதம் கேம்பிரிஜ் மற்றும் மொசச்சுசெட்ஸ் கணணிகள் என்பன சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டொட் கொம்மை பதிவு செய்தன. இதனையடுத்து அதேவருடத்தில் மேலும் ஐந்து நிறுவனங்கள் மிக மெதுவான பான்ட்வெகனை அறிமுகப்படுத்தின. இந்த காலகட்டத்திலிருந்து 1997 ம் ஆண்டு வரை இணையத்தளம் தனது பயணத்தை மேற்கொண்டு 10 லட்சம் டொட் கொம் முகவரிகளை பதிவு செய்தது. அதேவேளை டொட் கொம் இணையத்தள முகவரிகளை பாதுகாப்பதில் முன்னோடிகளான வெரிசைன் நிறுவனத்தைச் சேர்ந்த நிறைவேற்று அதிகாரி மார்க் மெக் லொக்ளின் கருத்து தெரிவிக்கையில் உண்மையிலேயே மனித குலம் பெற்ற உச்ச வெற்றி இது என குறிப்பிட்டார். 25 வருடங்களுக்கு முன்பு முதலாவது டொட் கொம் பதிவு செய்யப்பட்ட போது, அதன் வளர்ச்சி இந்த அளவிற்கு அபரிமிதமாக இருக்கும் என ஒருவரும் சிறிதுகூட ஊகித்து இருக்கமாட்டார்கள் என தெரிவித்தார். இந்த வளர்ச்சி மனித வர்க்கமே போற்றக்கூடிய ஒரு விஞ்ஞான வளர்ச்சியின் சாதனை எனவும் வெரிசைன் நிறுவனத்தைச் சேர்ந்த நிறைவேற்று அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 1980 ம் ஆண்டு கால பகுதியினில் மிக மிக சொற்பமானவர்களுக்கே டொட் கொம் என்ற வார்த்தை கூட பரிச்சயமானதாக இருந்திருக்கவில்லை. இந்த வளர்ச்சி குறித்து புத்தி ஜீவிகள் கருத்து தெரிவிக்கையில் இதற்கான காரணமாக நெட்ஸ்கேப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட மொசைக் வெப் பிரவுசரே காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தற்போது ஒவ்வொரு மாதமும் 6 லட்சத்து 68 ஆயிரம் டொட் கொம் இணைய பக்கங்கள் பதிவு செய்யப்படுவது புதுமையான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 170 கோடியாக அதாவது உலக சனத்தொகையின் கால் பங்கினரின் எண்ணிக்கைக்கேற்ப இருக்கும் என தற்போதே எதிர்வு கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr