இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட யாழ் மற்றும் வலிகாமம் வலய பாடசாலைகளின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைக்கப்பட்டன.

JKR  செவ்வாய், 16 மார்ச், 2010



யாழ் கல்வி வலயம் மற்றும் வலிகாமம் கல்வி வலையம் போன்றவற்றில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதிகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோரால் இன்றைய தினம் (15) திறந்து வைக்கப்பட்டன.


வலிகாமம் கல்வி வலயத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரி சுதுமலை சின்மய பாரதி ஆகிய பாடாசலைகளில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைக்கப்பட்டன.

முன்னதாக பாடசாலை மாணவ மாணவிகளின் பான்ட் இசை அணிவகுப்புடன் சிறப்பு விருந்தினனர்கள் நிகழ்விடங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தேசியக் கொடி மாகாணக் கொடி பாடசாலைக் கொடி என்பன ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து பாடசாலைக் கட்டிடத் தொகுதிகள் சிறப்பு விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டன.

இதே போன்று யாழ் கல்வி வலயத்திலுள்ள வைத்தீஸ்வராக் கல்லூரி திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்ட கற்றல் நடவடிக்கைகளுக்கான கட்டிடத் தொகுதிகளும் திறந்து வைக்கப்பட்டன.

இந்தக் கட்டிடத் தொகுதிகள் யாவும் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டும் புனரமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வுகளில் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் யாழ் மற்றும் வலிகாமம் வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr