இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எந்தவொரு அழுத்ததிற்கும் அடிபணியாது நாட்டை முன்னேற்றுவோம். - ஜனாதிபதி சூழுரை

JKR  செவ்வாய், 16 மார்ச், 2010


எந்தவொரு அழுத்தங்களுக்கும் கீழ்படியாது ஒரே நாட்டுமக்களாக பலம்வாய்ந்த நிலையில் அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி நாட்டின் மீதான சர்வதேச சூழ்ச்சிகளை தோற்கடிக்க வேண்டுமாயின் பலம் வாய்ந்த நாடாளுமன்றம் ஒன்று அவசியம். தற்போது இலங்கையில் நாடளாவிய ரீதியாக துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் வறுமையை ஒழித்து மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். பயங்கரவாதம் காரணமாக பறிபோயிருந்த பாரிய நிலப்பிரதேசம் மற்றும் சமுத்திர பிராந்தியம் தற்போது நாட்டின் தேவைக்கேற்ற பயன்பாட்டுக்கு கிடைத்துள்ளன. அந்த வளங்களின் உரிய பயனை பெற்று இலங்கை தன்னிறைவுள்ள நாடாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr