இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்தோனேசிய படகில் உள்ள இலங்கை அகதிகளை விடுவிக்க ஒபாமா தலையிட வேண்டும்-ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம்

JKR  ஞாயிறு, 21 மார்ச், 2010

இந்தோனேசியா மராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகளை விடுவிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலையிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினால் இது தொடர்பான கடிதம் ஒன்று நேற்று, பராக் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன..

5 மாதங்களாக படகில் நிர்க்கதியான நிலையில் உள்ள இவர்களை, விடுவித்து, அவுஸ்திரேலியா செல்வதற்கு இந்தோனேசியா அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இதன் பொருட்டு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்தோனேசியாவுக்கு வலியுறுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஒபாமா தமது சிறு பராயத்தில் சில காலங்கள் இந்தோனேசியாவில் வசித்து வந்துள்ளார். அத்துடன் அவர் இன்னும் சில நாட்களில் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொள்ளும் தீர்மானத்திலும் உள்ளார். இந்த நிலையில், பல மாதங்களாக படகில் உள்ள தமிழ் அகதிகளின் நிலைவரம் குறித்து அவர் சிந்திக்க வேண்டும் என அந்த கடிதத் தில் கோரப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு முறையான தீர்வு வழங்குவது குறித்தும் அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய அரசாங்கங்களுக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத் தில் கோரப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr