இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொட்டு அம்மான் உயிருடன் ?

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010

Loogix.com. Animated avatars. கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் இறந்து விட்டதாக அறிவிக்க வேண்டும். அவரது பெயரை தேடுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என இன்டர்போலுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது
.
பொட்டு அம்மான் குறித்து எந்தவிதத் தகவலும் இதுவரை இல்லை. அவர் உயிருடன் இருப்பதாக ஒரு தகவலும், இறந்து விட்டதாக இலங்கை அரசின் தகவலும் கூறி வருகின்றன.
இறந்து விட்டதாக இலங்கை கூறினாலும், பொட்டு அம்மானின் உடல் மீட்கப்படவில்லை.
பொட்டு அம்மான் உயிருடன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய உளவுத்துறையான ரா நம்புகிறது. அவரைத் தேடியும் வருகிறது. அதேபோல இன்டர்போல் அமைப்பும் பொட்டு அம்மானைத் தொடர்ந்து தேடி வருகிறது.
இந்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு பொட்டு அம்மானும், அவரது மனைவியும் உடலில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு, போரின் இறுதி நாளின்போது தற்கொலை செய்து கொண்டதாக இலங்கை கூறியது.
இதைத் தொடர்ந்து தற்போது பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இன்டர்போல் அறிவிக்க வேண்டும் எனவும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இலங்கை ராணுவ உளவுப் பிரிவு தலைவர் கபிலா ஹெண்டவிதரனா கூறுகையில், பொட்டு அம்மானை இறந்தவராக கருதி, தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என இன்டர்போலைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
பொட்டு அம்மான் இறந்து விட்டதாக உறுதியாக நம்புகிறோம் என்று கூறினார்.
பொட்டு அம்மான் விஷயத்தில் திடீரென இலங்கை அரசு இவ்வளவு அவசரம் காட்டுவதற்கான காரணம் புரியவில்லை.

1 கருத்துகள்:

மதவடி சொன்னது…

SUNDER said...
எங்கடை பாசத் தலைவரைப் பற்றி இதுக்கை குறை சொல்ல என்ன அருகதை இருக்கடா உங்களுக்கு??நண்பா உங்க கருத்து எனக்கு வியப்பும் வருத்தமும் அளிக்கிறது நல்லாவே இல்ல நண்பா//


ம்.... வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்திட்டாங்களாம். பாசம் பொங்கி வழியுது பாருங்கோ.. அநியாயம் நடக்கையுக்கை கண்ணுக்கு கூலிங் கிளாஸ் போட்டிருந்த கலைஞரைப் பற்றிப் போட்டதுக்கு பீத்திட்டு வந்திட்டாங்களாம்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr