இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஐ.பி.எல்., டுவென்டி -20 : சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை வெற்றி

JKR  சனி, 3 ஏப்ரல், 2010

சென்னை சேப்பாகத்தில் நடந்த இன்றைய ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னையில் நடந்த ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 5 வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற இக்கட்டான நிலையில் சென்‌னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது
. எனவே ஆட்டத்தில் அனல் பறக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.போட்டியின் அனலை முன்கூட்டியே கட்டியம் கூறுவது போல், சென்னையில் இன்று வெப்பம் 41 டிகிரியை தொட்டிருந்தது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக மாத்யூ ஹைடனும் முரளி விஜயும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை இருவரும் விளாசி தள்ளி ரன்களை சேர்த்தனர். துவக்க ஆட்டக்காரர் மாத்யூ ஹைடன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து, ஸ்ரீகாந்த் பந்து வீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த ரெய்னா 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். எனினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முரளி விஜய், ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசி தள்ளினார். இவருடன் ஜோடி சேர்ந்த மார்க்கல் தன் பங்கிற்கு வெளுத்து தள்ள 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 65 பந்துகளில் 152 ரன்களை எடுத்து சாதனை படைத்தது. தனது சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த முரளி விஜய் அபார சதமடித்தார். கோடை வெயில் வாட்டி எடுத்த சென்னை சேப்பாக்கத்தில் முரளி விஜயின் ரன் மழையால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

பின்னர் மார்க்கல் 34 பந்துகளில் 62 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார். தொடர்ந்து முரளி 56 பந்துகளில் 127 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த தோனி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 என்ற இமாலய ஸ்கோரை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில், வாட்சன் 2 விக்கெட்டுகளையும், ஸ்ரீகாந்த் வாக் மற்றும் வார்னே தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதற்கு முன் இந்தியாவில் 2008ல் நடந்த ஐ.பி.எல்., போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இன்றைய போட்டியில் சென்னை அணி, தனது முந்தைய சாதனையை முறியடித்தது.

இதையடுத்து, 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. சென்னை அணிக்கு சவால் விடும் வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்றைய ஆட்டம் இருந்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லம்ப் மற்றும் ஓஜா ஆகியோர் சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு ரன்களை குவித்தனர். அணியின் ஸ்கோர் 69 ஆக இருந்த போது, மார்க்கல் பந்து வீச்சில் லம்ப் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் வெறும் 4 ரன்களுக்கு மார்க்கல் பந்து வீச்சில் பொலிங்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த வாட்சன் மற்றும் ஓஜா ஜோடி சென்னை அணியின் பந்து வீச்சை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் மாற்றியது.

ஒரு கட்டத்தில் வெற்றி இலக்கை ராஜஸ்தான் எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொலிங்கர் பந்து வீச்சில் வாட்சன் அவுட் ஆனது ஆட்டத்தில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. 25 பந்துகளில் 60 ரன்களை வாட்சன் ‌எடுத்தார். பின்னர் வந்த பசல் மற்றும் ஜூஜூன்வாலா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை எடுத்தது. ஓஜா சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை முரளி விஜய் பெற்றார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr